அனைவருக்கும் வணக்கம்.
இது என்னுடைய முதல் பதிவு. பதிவு எழுத முதலில் எண்ணம் தோன்றுவதும் பின்பு மறைவதும் வெகு வருடங்களாக இருந்து வந்த நிலையில் இன்று என்னுடைய முதலாவது பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
முதலில் நான் படித்தது தமிழ் வழி தான் என்றாலும் பதிவு எழுத ஒரு தயக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் நிறைய பதிவுகளை படிக்க படிக்க, எழுத வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரிக்கிறது.
என் வாழ்கை பயணத்தையும், கருத்துகளையும் இவ்வளைதலத்தில் பதியலாம் என்றிருக்கிறேன். அதற்கு தமிழ் மக்களாகிய அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
நன்றி!
No comments:
Post a Comment